தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அதிக லாபம் தரும்  "உஜ்லா' கத்தரிக்காய்

திருத்தணி: குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தோட்டப் பயிரான கத்தரிக்காயை விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர்.

News image
Updated On :3 செப்டம்பர் 2014, 6:54 pm

திருத்தணி: குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தோட்டப் பயிரான கத்தரிக்காயை விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள வேலஞ்சேரி, முருக்கம்பட்டு, செருக்கனுôர், கே.ஜி.கண்டிகை, தரணிவராகபுரம், மத்துôர் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தோட்டப் பயிரான, கத்தரிக்காய் பயிரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

மற்ற காய்கறிப் பயிர்களை விட குறைந்த செலவில் அதிக லாபம் தருவது கத்தரிக்காய்.

ஒரு ஏக்கர் நிலத்தில் கத்தரிக்காய் தோட்டம் (பயிர்) அமைத்தால், அதற்கு ஆகும் செலவு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் மட்டுமே.

ஆனால், இந்த பயிரில், 120 நாள்களில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

மேலும், உஜ்லா கத்தரிக்காய்க்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், அதிகளவில் விவசாயிகள் அதை பயிர் செய்கின்றனர்.

இதுகுறித்து தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குப்பன் கூறியது: நான் கடந்த மூன்று ஆண்டுகளாக கத்தரிக்காய் தோட்டம் அமைத்து வருகிறேன்.

தற்போதும், ஒரு ஏக்கரில் உஜ்லா கத்தரிக்காய் அமைத்துள்ளேன். இதற்கு 4 முறை களை எடுத்து 3 முறை பூச்சி மருந்து இயந்திரம் மூலம் மருந்து தெளித்தேன்.

தற்போது, ஒரு நாளைக்கு 75 முதல் 100 கிலோ வரை கத்தரிக்காய்கள் கிடைக்கின்றன.

இதை திருத்தணி காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனை செய்து வருகிறேன்.

எனக்கு அதிக லாபம் தருவதால், தொடர்ந்து கத்தரிக்காய் பயிரிட்டு வருகிறேன் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.